726. | வாளொடன் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென் |
| நுண்ணவை அஞ்சு பவர்க்கு. |
|
கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை. |
727. | பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத் |
| தஞ்சு மவன்கற்ற நூல். |
|
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும். |
728. | பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் |
| நன்கு செலச்சொல்லா தார். |
|
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துகளைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை. |
729. | கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் |
| நல்லா ரவையஞ்சு வார். |
|
ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள். |
730. | உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக் |
| கற்ற செலச்சொல்லா தார். |
|
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள். |