பக்கம் எண் :

திருக்குறள்147பொருள்

74. நாடு
 

731.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வருஞ் சேர்வது நாடு.
 

செழிப்புக்  குறையாத  விளைபொருள்களும்,  சிறந்த   பெருமக்களும்,
செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும்  அமையப்பெற்றதே  நல்ல
நாடாகும்.
 

732.

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்

ஆற்ற விளைவது நாடு.
 

பொருள்  வளம்   நிறைந்ததாகவும்,  பிறர்   போற்றத்   தக்கதாகவும்,
கேடற்றதாகவும்,  நல்ல  விளைச்சல்  கொண்டதாகவும்  அமைவதே சிறந்த
நாடாகும்.
 

733.

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்

கிறையொருங்கு நேர்வது நாடு.
 

புதிய  சுமைகள்  ஒன்றுதிரண்டு  வரும்  போதும் அவற்றைத் தாங்கிக்
கொண்டு,  அரசுக்குரிய   வரி   வகைகளைச்  செலுத்துமளவுக்கு   வளம்
படைத்ததே சிறந்த நாடாகும்.
 

734.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு.
 

பசியும்,  பிணியும்,  பகையுமற்ற   நாடுதான்   சிறந்த   நாடு   எனப்
பாராட்டப்படும்.
 

735.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.
 

பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும் அரசில் ஆதிக்கம்
செலுத்தும்  கொலைகாரர்களால்   விளையும்  பொல்லாங்கும்  இல்லாததே
சிறந்த நாடாகும்.