பக்கம் எண் :

17

ஊ. தெளிவு
 

உரைத் தெளிவுக்கு,

1162.

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு 

உரைத்தலும் நாணுத் தரும். 

 

காதல்  நோயை  என்னால்  மறைக்கவும்    முடியவில்லை;   இதற்குக்
காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.
 

எ. சுருக்க விளக்கம்
 

சுருக்க விளக்கத்துக்கு, 

1317.

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் 

யாருள்ளித் தும்மினீர் என்று. 

 

தும்மினேன்;  வழக்கப்படி   அவள்   என்னை வாழ்த்தினாள். உடனே
என்ன சந்தேகமோ "யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்"என்று  கேட்டு,
முதலில்   அளித்த    வாழ்த்துக்கு  மாறாக  அழத்  தொடங்கிவிட்டாள்-
என்பதையும் கண்டின்புறலாம்.
 

ஏ. புதுப்பொருள்
 

அருஞ்சொற்  பொருள் கொள்வதில் கலைஞர் கண்ட நேர்மை பிறழாப்
புதுமைக்குப் பின்வரும் பகுதிகள் சான்று கூறுகின்றன.
 

98.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் 

இம்மையும் இன்பந் தரும். 

 

சிறுமைத்தனமற்ற  இனியசொல்  ஒருவனுக்கு  அவன் வாழும் போதும்,
வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
 

புத்தேளிர்  என்னும்  சொல்  புதுமை என்பதனடியாகப் பிறந்தது எனக்
கொண்டு பொருள் தந்து மருட்கை