பக்கம் எண் :

அரணியல்148கலைஞர் உரை

736.

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டின் தலை.
 

எந்த   வகையிலும்  கெடுதலை   அறியாமல்,   ஒருவேளை  கெடுதல்
ஏற்படினும் அதனைச்  சீர்  செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள
நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.
 

737.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற் குறுப்பு.
 

ஆறு, கடல்  எனும்  இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத்
தொடரும்,  வருபுனலாம்  மழையும், வலிமைமிகு  அரணும்,  ஒரு நாட்டின்
சிறந்த உறுப்புகளாகும்.
 

738.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.
 

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல்  மிகுதி,  பொருளாதார வளம்,
இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக்
கூறப்படுபவைகளாகும்.
 

739.

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரும் நாடு.
 

இடைவிடாமல்  முயற்சி மேற்கொண்டு  வளம்  பெறும் நாடுகளை விட,
இயற்கையிலேயே  எல்லா  வளங்களையும்   உடைய   நாடுகள்   சிறந்த
நாடுகளாகும்.
 

740.

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு.
 

நல்ல அரசு அமையாத  நாட்டில்  எல்லாவித வளங்களும் இருந்தாலும்
எந்தப் பயனும் இல்லாமற் போகும்.