பக்கம் எண் :

அரணியல்150கலைஞர் உரை

746.

எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்

நல்லா ளுடைய தரண்.
 

போருக்குத்  தேவையான  எல்லாப்  பொருள்களும்  கொண்டதாகவும்,
களத்தில்  குதிக்கும் வலிமை மிக்க  வீரர்களை  உடையதாகவும் இருப்பதே
அரண் ஆகும்.
 

747.

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற் கரிய தரண்.
 

முற்றுகையிட்டோ,    முற்றுகையிடாமலோ    அல்லது    வஞ்சனைச்
சூழ்ச்சியாலோ  பகைவரால்  கைப்பற்றப்பட  முடியாத   வலிமையுடையதே
அரண் எனப்படும்.
 

748.

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

பற்றியார் வெல்வ தரண்.
 

முற்றகையிடும்   வலிமைமிக்க   படையை  எதிர்த்து,  உள்ளேயிருந்து
கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண்
ஆகும்.
 

749.

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறெய்தி மாண்ட தரண்.
 

போர்   முனையில்   பகைவரை   வீழ்த்துமளவுக்கு   உள்ளேயிருந்து
கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே
அரண் ஆகும்.
 

750.

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்ல தரண்.
 

கோட்டைக்குத் தேவையான எல்லாவிதச் சிறப்புகளும் இருந்தாலும்கூட
உள்ளிருந்து  செயல்படுவோர்  திறமையற்றவர்களாக  இருந்தால்   எந்தப்
பயனும் கிடையாது.