77. படை மாட்சி |
761. | உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் |
| வெறுக்கையுள் எல்லாம் தலை. |
|
எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச் சிறந்த செல்வமாகும். |
762. | உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் |
| தொல்படைக் கல்லால் அரிது. |
|
போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது. |
763. | ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை |
| நாகம் உயிர்ப்பக் கெடும். |
|
எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள். |
764. | அழிவின் றறைபோகா தாகி வழிவந்த |
| வன்க ணதுவே படை. |
|
எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும். |
765. | கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் |
| ஆற்ற லதுவே படை. |
|
உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும். |