பக்கம் எண் :

படையியல்154கலைஞர் உரை

766.

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு.
 

வீரம், மான  உணர்வு, முன்னோர் சென்ற வழி  நடத்தல், தலைவனின்
நம்பிக்கையைப்  பெறுதல்  ஆகிய    நான்கும்  படையைப்  பாதுகாக்கும்
பண்புகளாகும்.
 

767.

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து.
 

களத்தில்,  முதலில்  எதிர்கொள்ளும்  போரைத்   தாங்கித்  தகர்க்கும்
ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய
சிறந்த படையாகும்.
 

768.

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும்.
 

போர் புரியும் வீரம்,  எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும்
விட ஒரு படையின்  அணிவகுப்புத்  தோற்றம்  சிறப்புடையதாக  அமைய
வேண்டும்.
 

769.

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை.
 

சிறுத்துவிடாமலும்,  தலைவனை வெறுத்துவிடாமலும், பயன்படாத நிலை
இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.
 

770.

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.
 

உறுதிவாய்ந்த  வீரர்களை  அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை
தாங்கும்  தலைவர்கள்  இல்லாவிட்டால்  அந்தப்  படை  நிலைத்து நிற்க
முடியாது.