776. | விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் |
| வைக்குந்தன் நாளை எடுத்து. |
|
ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான். |
777. | சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் |
| கழல்யாப்புக் காரிகை நீர்த்து. |
|
சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும். |
778. | உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன் |
| செறினுஞ்சீர் குன்றல் இலர். |
|
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்க்களத்தில் உயிரைப்பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர். |
779. | இழைத்த திகவாமைச் சாவாரை யாரே |
| பிழைத்த தொறுக்கிற் பவர். |
|
சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது. |
780. | புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா |
| டிரந்துகோட் டக்க துடைத்து. |
|
தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு. |