பக்கம் எண் :

18

தெளிவிக்கும்     மாட்சிக்குக்       கீழ்க்      காணப்படும்   பகுதிகள்
எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.
 

58.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 

புத்தேளிர் வாழும் உலகு. 

 

நற்பண்பு   பெற்றவனைக்  கணவனாகப்     பெற்றால்,   பெண்டிர்க்கு
இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்.
 

213.

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற. 

 

பிறர்க்கு   உதவிடும்   பண்பாகிய "ஒப்பரவு"  என்பதை விடச் சிறந்த
பண்பினை இன்றைய உலகிலும்  இனிவரும்  புதிய   உலகிலும்  காண்பது
அரிது.
 

1323.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னா ரகத்து. 

 

நிலத்தோடு   நீர்   கலந்தது   போல     அன்புடன்   கூடியிருக்கும்
காதலரிடத்தில் ஊடல் கொள்வதைவிடப்   புதிய   உலகம்   வேறொன்று
இருக்க முடியுமா?
 

234.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் 

போற்றாது புத்தேள் உலகு. 

 

இனிவரும் புதிய உலகம்கூட, இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ்
ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக்
கொண்டிராது.
 

இவற்றுள்   ஈற்றில்   இடம்பெற்றுள்ள   பகுதி  புத்தம்புதிய விழுமிய
கருத்தையளிக்கும் உரையாகவும் இலங்குவதைக் காணமுடியும்.
 

அய். புத்தம்புது விளக்கம்
 

புதுமை மணங்கமழும் அத்தகைய வேறு சில பொருளுரைகட்கு,