80. நட்பாராய்தல் |
791. | நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் |
| வீடில்லை நட்பாள் பவர்க்கு. |
|
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும். |
792. | ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை |
| தான்சாம் துயரம் தரும். |
|
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும். |
793. | குணனும் குடிமையும் குற்றமும் குன்றா |
| இனனும் அறிந்தியாக்க நட்பு. |
|
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும். |
794. | குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் |
| கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. |
|
பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக் குரியதாகும். |
795. | அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய |
| வல்லார்நட் பாய்ந்து கொளல். |
|
தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும். |