796. | கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை |
| நீட்டி அளப்பதோர் கோல் |
|
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது. |
797. | ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார் |
| கேண்மை ஒரீஇ விடல். |
|
ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும். |
798. | உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க |
| அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. |
|
ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக் கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்க்காமலே இருந்து விட வேண்டும். |
799. | கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை |
| உள்ளினும் உள்ளஞ் சுடும். |
|
ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும். |
800. | மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும் |
| ஒருவுக ஒப்பிலார் நட்பு. |
|
மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலைகொடுத்தாவது விலக்கிடவேண்டும். |