பக்கம் எண் :

நட்பியல்164கலைஞர் உரை

816.

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.
 

அறிவில்லாதவனிடம்   நெருங்கிய   நட்புக்   கொண்டிருப்பதை  விட,
அறிவுடைய   ஒருவரிடம்    பகை   கொண்டிருப்பது   கோடி   மடங்கு
மேலானதாகும்.
 

817.

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்.
 

சிரித்துப்  பேசி  நடிப்பவர்களின்  நட்பைக் காட்டிலும், பகைவர்களால்
ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.
 

818.

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல்.
 

நிறைவேற்றக்  கூடிய  செயலை,  நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின்
உறவை,  அவருக்குத்   தெரியாமலேயே  மெல்ல  மெல்ல  விட்டு   விட
வேண்டும்.
 

819.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.
 

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு, கனவிலே கூடத்
துன்பத்தைத்தான் கொடுக்கும்.
 

820.

எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றிற் பழிப்பார் தொடர்பு.
 

தனியாகச்  சந்திக்கும்  போது  இனிமையாகப்  பழகி  விட்டுப்  பொது
மன்றத்தில் பழித்துப்  பேசுபவரின்  நட்பு,  தம்மை  அணுகாமல் விலக்கிக்
கொள்ளப்பட வேண்டும்.