826. | நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் |
| ஒல்லை உணரப் படும். |
|
பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும், அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும். |
827. | சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் |
| தீங்கு குறித்தமை யான். |
|
பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது. |
828. | தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் |
| அழுதகண் ணீரும் அனைத்து. |
|
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்களின், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும். |
829. | மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து |
| நட்பினுட் சாப்புல்லற் பாற்று. |
|
வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப் பிடிக்க வேண்டும். |
830. | பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் |
| டகநட் பொரீஇ விடல். |
|
பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட வேண்டும். |