29. | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி |
| கணமேயும் காத்தல் அரிது. |
|
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம்கூட நிலைத்து நிற்காது. |
37. | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை |
| பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. |
|
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள். |
55. | தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் |
| பெய்யெனப் பெய்யும் மழை. |
|
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள். |
ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். இவற்றுள், சொற்களைச் சிதைக்காமலும், மாற்றாமலும் பொருள் கண்டுள்ள நயம் போற்றத் தக்கதாக உள்ளது. |
ஒ. நுண்மாண் நுழைபுலம் |
கலைஞரின் நுண்மாண் நுழைபுலத்துக்கு, |
622. | வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் |
| உள்ளத்தின் உள்ளக் கெடும். |