85. புல்லறிவாண்மை |
841. | அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை |
| இன்மையா வையா துலகு. |
|
அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது. |
842. | அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் |
| இல்லை பெறுவான் தவம். |
|
அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருத வேண்டும். |
843. | அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை |
| செறுவார்க்கும் செய்தல் அரிது. |
|
எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள். |
844. | வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை |
| உடையம்யாம் என்னும் செருக்கு. |
|
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும். |
845. | கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற |
| வல்லதூஉம் ஐயம் தரும். |
|
அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும். |