856. | இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை |
| தவலும் கெடலும் நணித்து. |
|
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை, விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும். |
857. | மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் |
| இன்னா அறிவி னவர். |
|
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள். |
858. | இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை |
| மிகலூக்கின் ஊக்குமாங் கேடு. |
|
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும். |
859. | இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை |
| மிகல்காணும் கேடு தரற்கு. |
|
ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான். |
860. | இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் |
| நன்னயம் என்னும் செருக்கு. |
|
மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும். நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெரு மகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும். |