பக்கம் எண் :

திருக்குறள்173பொருள்

87. பகை மாட்சி
 

861.

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை.
 

மெலியோரை விடுத்து,  வலியோரை  எதிர்த்துப் போரிட விரும்புவதே
பகைமாட்சி எனப் போற்றப்படும்.
 

862.

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.
 

உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல்,
தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?
 

863.

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு.
 

அச்சமும்,  மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும்,
இரக்க   சிந்தையும்   இல்லாதவனாகவும்   ஒருவன்  இருந்தால்,  அவன்
பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
 

864.

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எளிது.
 

சினத்தையும்  மனத்தையும்   கட்டுப்படுத்த   முடியாதவர்களை,  எவர்
வேண்டுமானாலும்  எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும்
எளிதில் தோற்கடித்து விடலாம்.
 

865.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

பண்பிலன் பற்றார்க் கினிது.
 

நல்வழி நாடாமல், பொருத்தமானதைச்  செய்யாமல், பழிக்கு அஞ்சாமல்,
பண்பும்  இல்லாமல் ஒருவன்   இருந்தால்  அவன்  பகைவரால்  எளிதில்
வெல்லப்படுவான்.