பக்கம் எண் :

நட்பியல்174கலைஞர் உரை

866.

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேணாமை பேணப் படும்.
 

சிந்திக்காமலே   சினம்    கொள்பவனாகவும்,   பேராசைக்காரனாகவும்
இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.
 

867.

கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து

மாணாத செய்வான் பகை.
 

தன்னோடு  இருந்துகொண்டே  தனக்குப்  பொருந்தாத காரியங்களைச்
செய்து  கொண்டிருப்பவனைப்  பொருள்  கொடுத்தாவது   பகைவனாக்கிக்
கொள்ள வேண்டும்.
 

868.

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்

கினனிலனாம் ஏமாப் புடைத்து.
 

குணக்கேடராகவும்,  குற்றங்கள்  மலிந்தவராகவும்  ஒருவர்  இருந்தால்,
அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.
 

869.

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.
 

அஞ்சிடும்    கோழைகளாகவும்,    அறிவில்லாக்    கோழைகளாகவும்
பகைவர்கள் இருப்பின்  அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும்
இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.
 

870.

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்

ஒல்லானை ஒல்லா தொளி.
 

போர்முறை  கற்றிடாத  பகைவர்களைக்கூட  எதிர்ப்பதற்குத்  தயக்கம்
காட்டுகிறவர்கள்,  உண்மையான  வீரர்களை  எப்படி  எதிர்கொள்வார்கள்
எனக் கேலிபுரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.