பக்கம் எண் :

நட்பியல்176கலைஞர் உரை

876.

தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்

தேறான் பகாஅன் விடல்.
 

பகைவரைப்பற்றி   ஆராய்ந்து    தெளிவடைந்திருந்தாலும்,    இல்லா
விட்டாலும் அதற்கிடையே  ஒரு கேடு வரும்போது  அந்தப்  பகைவருடன்
அதிகம்   நெருங்காமல்    நட்புக்   காட்டியும்   அவர்களைப்   பிரிந்து
விடாமலேயே பகைகொண்டும் இருப்பதே நலமாகும்.
 

877.

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க

மென்மை பகைவர் அகத்து.
 

தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம்
சொல்லக்கூடாது.  தனது பலவீனத்தைப்  பகைவரிடம் வெளிப்படுத்திவிடக்
கூடாது.
 

878.

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு.
 

வழிவகை   உணர்ந்து,    தன்னையும்   வலிமைப்படுத்திக்  கொண்டு,
தற்காப்பும்  தேடிக்  கொண்டவரின்   முன்னால்   பகையின்   ஆணவம்
தானாகவே ஒடுங்கி விடும்.
 

879.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.
 

முள்மரத்தை,  அது  சிறிய  கன்றாக  இருக்கும்போதே கிள்ளி எறிவது
போல், பகையையும், அது முற்றுவதற்குமுன்பே வீழ்த்திவிட வேண்டும்.
 

880.

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார்.
 

பகைவரின்  ஆணவத்தைக்  குலைக்க   முடியாதவர்கள்,   சுவாசிக்கிற
காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.