89. உட்பகை |
881. | நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் |
| இன்னாவாம் இன்னா செயின். |
|
இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அதுபோலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும். |
882. | வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக |
| கேள்போல் பகைவர் தொடர்பு. |
|
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். |
883. | உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து |
| மட்பகையின் மாணத் தெறும். |
|
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை மண்பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும். |
884. | மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா |
| ஏதம் பலவும் தரும். |
|
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும். |
885. | உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் |
| ஏதம் பலவும் தரும். |
|
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும். |