பக்கம் எண் :

20

வெள்ளம்போல்   துன்பம்   வந்தாலும்  அதனை வெல்லும் வழி யாது
என்பதை அறிவுடையவர்கள்   நினைத்த  மாத்திரத்திலேயே  அத்துன்பம்
விலகி ஓடிவிடும் என்னும் உரை சான்றாகத் திகழ்கிறது.
 

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

அடுத்தூர்வது அஃதொப்ப தில். 

 

என்னும் குறள் கருத்தை இதனுடன் இணைத்துப் பார்த்தால் கலைஞரின்
புலமைச் செழிப்புப் பளிச்சிடுவதைக் காண முடியும்.
 

6. நன்றி
 

திராவிட   மறுமலர்ச்சி   ஏற்பட்டுத்  தந்தை   பெரியாரும், பேரறிஞர்
அண்ணாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்  அவர்களும்,  முத்தமிழறிஞர்
கலைஞர்  அவர்களும்   விழிப்புணர்ச்சி   ஏற்படுத்துவதற்கு   முன்னால்,
'இதற்கிணையாகக்  கூறக்கூடிய   பொது  அறநூல் பிறிதேதுமில்லை' என்று
இன்றும் சிறப்பித்துக் கூறப்படும்  திருக்குறள்' தான் பெற்றிருக்க வேண்டிய
செல்வாக்கைப்  பெற  முடியாமல்  ஒதுக்கப்பட்டே கிடந்தது. இதற்குப் பல
காரணங்களுண்டு.  அவற்றில்  ஒன்று   அது   பொதுவாக   மக்களாலும்
சிறப்பாகத்  தமிழர்களாலும்  பின்பற்றப்படும்  நூலாக ஆகாமைதான். அது
பற்றிப் பேசுவதும் எழுதுவதும் தவிர அதை வாழ்க்கை நெறியாகக் கொண்டு
வாழ்வோர்    இன்றும்    எத்தனை   பேர்?   அவ்வாறு   திருக்குறளை
வழிகாட்டியாகக்  கொள்ளாமைக்கும்   சில  காரணங்களுண்டு.  அவற்றுள்
ஒன்று ஒவ்வொரு குறளும் சுட்டிக்காட்டும்  நெறியைத்  தெளிவாகச்  சுட்டி
வரையறுத்து   அது   இதுதான்   என   இன்றைய  தமிழனுக்குப் புரியும்
வண்ணமும்,   புரிந்து     உளங்கொள்ளும்     வண்ணமும்   அமைந்த
உரையின்மையே. அக் குறையைப் போக்கவும் எழுந்ததே  கலைஞர் உரை.
கலைஞர், வள்ளுவர்