886. | ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் |
| பொன்றாமை ஒன்றல் அரிது. |
|
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும். |
887. | செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே |
| உட்பகை உற்ற குடி. |
|
செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள். |
888. | அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு |
| துட்பகை உற்ற குடி. |
|
அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும். |
889. | எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் |
| உட்பகை உள்ளதாங் கேடு. |
|
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும். |
890. | உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள் |
| பாம்போ டுடனுறைந் தற்று. |
|
உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும். |