966. | புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற் |
| றிகழ்வார்பின் சென்று நிலை. |
|
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்? |
967. | ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே |
| கெட்டான் எனப்படுதல் நன்று. |
|
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல். |
968. | மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை |
| பீடழிய வந்த இடத்து. |
|
சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும். |
969. | மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் |
| உயிர்நீப்பர் மானம் வரின். |
|
உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள். |
970. | இளிவரின் வாழாத மானம் உடையார் |
| ஒளிதொழு தேத்தும் உலகு. |
|
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும். |