976. | சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் |
| பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. |
|
பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை. |
977. | இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் |
| சீரல் லவர்கண் படின். |
|
சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை. |
978. | பணியுமாம் என்றும் பெருமை சிறுமை |
| அணியுமாம் தன்னை வியந்து. |
|
பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள். |
979. | பெருமை பெருமிதம் இன்மை சிறுமை |
| பெருமிதம் ஊர்ந்து விடல். |
|
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும். |
980. | அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் |
| குற்றமே கூறி விடும். |
|
பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும். |