பக்கம் எண் :

குடியியல்200கலைஞர் உரை

996.

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்.
 

உலக  நடைமுறைகள்,  பண்பாளர்களைச்  சார்ந்து  இயங்க வேண்டும்.
இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.
 

997.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்.
 

அரம்போன்ற   கூர்மையான   அறிவுடைய  மேதையாக  இருந்தாலும்,
மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.
 

998.

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.
 

நட்புக்கு     ஏற்றவராக     இல்லாமல்    தீமைகளையே     செய்து
கொண்டிருப்பவரிடம்,  நாம்  பொறுமை  காட்டிப் பண்புடையவராக நடந்து
கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.
 

999.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன் றிருள்.
 

நண்பர்களுடன்  பழகி  மகிழத்  தெரியாதவர்களுக்கு உலகம்  என்பது
பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.
 

1000.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.
 

பாத்திரம்  களிம்பு பிடித்திருந்தால்,  அதில் ஊற்றி வைக்கப்படும் பால்
எப்படிக்   கெட்டுவிடுமோ  அதுபோலப்  பண்பு  இல்லாதவர்கள்  பெற்ற
செல்வமும் பயனற்றதாகி விடும்.