பக்கம் எண் :

திருக்குறள்203பொருள்

102. நாணுடைமை
 

1011.

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற.
 

ஒருவர்  தமது  தகாத  நடத்தையின்  காரணமாக நாணுவதற்கும், நல்ல
பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.
 

1012.

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு.
 

உணவு,  உடை  போன்ற  அனைத்தும்  எல்லோருக்கும்  பொதுவான
தேவைகளாக  அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது,
பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.
 

1013.

ஊனைக் குறித்த உ யிரெல்லாம் நாணென்னும்

நன்மை குறித்தது சால்பு.
 

உடலுடன்  இணைந்தே  உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாண
உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.
 

1014.

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்

பிணியன்றோ பீடு நடை.
 

நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு,
பெரியவர்களுக்கு  அணிகலன்   ஆக   விளங்கும்.   அந்த  அணிகலன்
இல்லாமல்  என்னதான்  பெருமிதமாக நடைபோட்டாலும்,  அந்த நடையை
ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.
 

1015.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்

குறைபதி என்னும் உலகு.
 

தமக்கு  வரும்  பழிக்காக  மட்டுமின்றிப்  பிறர்க்கு வரும் பழிக்காகவும்
வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.