105. நல்குரவு |
1041. | இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் |
| இன்மையே இன்னா தது. |
|
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை. |
1042. | இன்மை எனவொரு பாவி மறுமையும் |
| இம்மையும் இன்றி வரும். |
|
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது. |
1043. | தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக |
| நல்குர வென்னும் நசை. |
|
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும். |
1044. | இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த |
| சொற்பிறக்கும் சோர்வு தரும். |
|
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும். |
1045. | நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத் |
| துன்பங்கள் சென்று படும். |
|
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும். |