1046. | நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் |
| சொற்பொருள் சோர்வு படும். |
|
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும். |
1047. | அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் |
| பிறன்போல நோக்கப் படும். |
|
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள். |
1048. | இன்றும் வருவது கொல்லோ நெருநலும் |
| கொன்றது போலும் நிரப்பு. |
|
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான். |
1049. | நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் |
| யாதொன்றும் கண்பா டரிது. |
|
நெருப்புக்குள் படுத்துத் தூங்குவதுகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும். |
1050. | துப்புர வில்லார் துவரத் துறவாமை |
| உப்பிற்கும் காடிக்கும் கூற்று. |
|
ஒழுங்குமுறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு. |