106. இரவு |
1051. | இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் |
| அவர்பழி தம்பழி அன்று. |
|
கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல. |
1052. | இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை |
| துன்பம் உறாஅ வரின். |
|
வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும். |
1053. | கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் |
| றிரப்புமோர் ஏஎர் உடைத்து. |
|
உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமை யுடையதே யாகும். |
1054. | இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் |
| கனவிலும் தேற்றாதார் மாட்டு. |
|
இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடைய தாகும். |
1055. | கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் |
| றிரப்பவர் மேற்கொள் வது. |
|
உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர். |