1056. | கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை |
| யெல்லா மொருங்கு கெடும். |
|
இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும். |
1057. | இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் |
| உள்ளுள் உவப்ப துடைத்து. |
|
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும். |
1058. | இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் |
| மரப்பாவை சென்றுவந் தற்று. |
|
வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை. |
1059. | ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் |
| மேவார் இலாஅக் கடை. |
|
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும். |
1060. | இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை |
| தானேயும் சாலும் கரி. |
|
இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக் கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே. |