107. இரவச்சம் |
1061. | கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் |
| இரவாமை கோடி உறும். |
|
இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும். |
1062. | இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து |
| கெடுக உலகியற்றி யான். |
|
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும். |
1063. | இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் |
| வன்மையின் வன்பாட்ட தில். |
|
வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப்போல் வேறொரு கொடுமை இல்லை. |
1064. | இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் |
| காலும் இரவொல்லாச் சால்பு. |
|
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது. |
1065. | தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த |
| துண்ணலின் ஊங்கினிய தில். |
|
கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை. |