6. | பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க |
| நெறிநின்றார் நீடுவாழ் வார். |
|
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும். |
7. | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் |
| மனக்கவலை மாற்றல் அரிது. |
|
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. |
8. | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் |
| பிறவாழி நீந்தல் அரிது. |
|
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல. |
9. | கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் |
| தாளை வணங்காத் தலை. |
|
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும். |
10. | பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் |
| இறைவன் அடிசேரா தார். |
|
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். |