பக்கம் எண் :

களவியல்218கலைஞர் உரை

1086.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்னிவள் கண்.
 

புருவங்கள் வளைந்து  கோணாமல் நேராக  இருந்து  மறைக்குமானால்,
இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.
 

1087.

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்.
 

மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்;
அது   மங்கையொருத்தியின்   சாயாத   கொங்கை  மேல்  அசைந்தாடும்
ஆடைபோல் இருந்தது.
 

1088.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு.
 

களத்தில்  பகைவரைக்  கலங்கவைக்கும்  என்  வலிமை, இதோ இந்தக்
காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!
 

1089.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்

கணியெவனோ ஏதில தந்து.
 

பெண்மானைப்   போன்ற    இளமை    துள்ளும்    பார்வையையும்,
நாணத்தையும்     இயற்கையாகவே     அணிகலன்களாகக்     கொண்ட
இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?
 

1090.

உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.
 

மதுவை  உண்டால்தான்  மயக்கம் வரும்; ஆனால் கண்டாலே மயக்கம்
தருவது காதல்தான்.