110. குறிப்பறிதல் |
1091. | இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு |
| நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. |
|
காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை. |
1092. | கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் |
| செம்பாகம் அன்று பெரிது. |
|
கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது! |
1093. | நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் |
| யாப்பினுள் அட்டிய நீர். |
|
கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது. |
1094. | யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால் |
| தானோக்கி மெல்ல நகும். |
|
நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என்மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா? |
1095. | குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் |
| சிறக்கணித்தாள் போல நகும். |
|
அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள். |