111. புணர்ச்சி மகிழ்தல் |
1101. | கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் |
| ஒண்தொடி கண்ணே உள. |
|
வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன. |
1102. | பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை |
| தன்னோய்க்குத் தானே மருந்து. |
|
நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால், காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள். |
1103. | தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் |
| தாமரைக் கண்ணான் உலகு. |
|
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா? |
1104. | நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் |
| தீயாண்டுப் பெற்றாள் இவள். |
|
நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக்கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள். |
1105. | வேட்ட பொழுதின் அவையவை போலுமே |
| தோட்டார் கதுப்பினாள் தோள். |
|
விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன. |