1116. | மதியும் மடந்தை முகனும் அறியா |
| பதியின் கலங்கிய மீன். |
|
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கித் தவிக்கின்றன. |
1117. | அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல |
| மறுவுண்டோ மாதர் முகத்து. |
|
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே! |
1118. | மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் |
| காதலை வாழி மதி. |
|
முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக. |
1119. | மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் |
| பலர்காணத் தோன்றல் மதி. |
|
நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய்ப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல். |
1120. | அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர் |
| அடிக்கு நெருஞ்சிப் பழம். |
|
அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை. |