113. காதற்சிறப்பு உரைத்தல் |
1121. | பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி |
| வாலெயி றூறிய நீர். |
| |
இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும். |
| 1122. | உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன |
| மடந்தையொ டெம்மிடை நட்பு. |
| |
உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு. |
| 1123. | கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் |
| திருநுதற் கில்லை யிடம். |
| |
நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக - என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு! |
| 1124. | வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் |
| அதற்கன்னள் நீங்கும் இடத்து. |
| |
ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன். |
| 1125. | உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் |
| ஒள்ளமர்க் கண்ணாள் குணம். |
| |
ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு. |