2. வான்சிறப்பு |
11. | வானின் றுலகம் வழங்கி வருதலால் |
| தானமிழ்தம் என்றுணரற் பாற்று. |
|
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. |
12. | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் |
| துப்பாய தூஉம் மழை. |
|
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது. |
13. | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து |
| உள்நின் றுடற்றும் பசி. |
|
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும். |
14. | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் |
| வாரி வளங்குன்றிக் கால். |
|
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றிவிடும். |
15. | கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே |
| எடுப்பதூஉம் எல்லாம் மழை. |
|
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும். |