பக்கம் எண் :

களவியல்228கலைஞர் உரை

1136.

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படலொல்லா பேதைக்கென் கண்.

 

காதலிக்காக   என்   கண்கள்   உறங்காமல்  தவிக்கின்றன;   எனவே
மடலூர்தலைப்   பற்றி    நள்ளிரவிலும்   நான்   உறுதியாக   எண்ணிக்
கொண்டிருக்கிறேன்.
 

1137.

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணிற் பெருந்தக்க தில்.

 

கொந்தளிக்கும்  கடலாகக்   காதல்  நோய்  துன்புறுத்தினாலும்  கூடப்
பொறுத்துக்கொண்டு,  மடலேறாமல்  இருக்கும்  பெண்ணின்  பெருமைக்கு
நிகரில்லை.
 

1138.

நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும்.

 

பாவம்   இவர்,   மனத்தில்   உள்ளதை    ஒளிக்கத்   தெரியாதவர்;
பரிதாபத்திற்குரியவர் என்றெல்லாம்  பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு
விடக்கூடியது காதல்.
 

1139.

அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்

மறுகின் மறுகும் மருண்டு.

 

என்னைத்  தவிர  யாரும்  அறியவில்லை  என்பதற்காக  என்  காதல்
தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!
 

1140.

யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.

 

காதல்        நோயினால்         வாடுவோரின்        துன்பத்தை
அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து
நகைப்பார்கள்.