115. அலர் அறிவுறுத்தல் |
1141. | அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் |
| பலரறியார் பாக்கியத் தால். |
|
எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள். |
1142. | மலரன்ன கண்ணாள் அருமை அறியா |
| தலரெமக் கீந்ததிவ் வூர். |
|
அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது. |
1143. | உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப் |
| பெறாஅது பெற்றன்ன நீர்த்து. |
|
எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே! |
1144. | கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் |
| தவ்வென்னும் தன்மை இழந்து. |
|
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய்விடும். |
1145. | களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் |
| வெளிப்படுந் தோறும் இனிது. |
|
காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும். |