1166. | இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் |
| துன்பம் அதனிற் பெரிது. |
|
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது. |
1167. | காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் |
| யாமத்தும் யானே உளேன். |
|
நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன். |
1168. | மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா |
| என்னல்ல தில்லை துணை. |
|
'இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.' |
1169. | கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் |
| நெடிய கழியும் இரா. |
|
இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது. |
1170. | உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் |
| நீந்தல மன்னோவென் கண். |
|
காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. |