118. கண் விதுப்பழிதல் |
1171. | கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் |
| தாங்காட்ட யாங்கண் டது. |
|
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்? |
1172. | தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் |
| பைதல் உழப்ப தெவன். |
|
விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்? |
1173. | கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் |
| இதுநகத் தக்க துடைத்து. |
|
தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத் தக்க ஒன்றாகும். |
1174. | பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா |
| உய்வில்நோய் என்கண் நிறுத்து. |
|
தப்பிப் பிழைக்க முடியாத தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன. |
1175. | படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் |
| காமநோய் செய்தவென் கண். |
|
கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன. |