1176. | ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் |
| தாஅம் இதற்பட் டது. |
|
ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே! |
1177. | உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து |
| வேண்டி அவர்க்கண்ட கண். |
|
அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துத் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப் போகும் நிலையிலும் துன்பப்படுங்கள். |
1178. | பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் |
| காணா தமைவில கண். |
|
என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே! |
1179. | வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை |
| ஆரஞர் உற்றன கண். |
|
இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்து விட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும். |
1180. | மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல் |
| அறைபறை கண்ணார் அகத்து. |
|
காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது; யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல. |