119. பசப்புறு பருவரல் |
1181. | நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் |
| பண்பியார்க்கு குரைக்கோ பிற. |
|
என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்? |
1182. | அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் |
| மேனிமேல் ஊரும் பசப்பு. |
|
பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது! |
1183. | சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா |
| நோயும் பசலையும் தந்து. |
|
காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார். |
1184. | உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால் |
| கள்ளம் பிறவோ பசப்பு. |
|
யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னை யறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி? |
1185. | உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென் |
| மேனி பசப்பூர் வது. |
|
என்னைப் பிரிந்து என் காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம். |