16. | விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே |
| பசும்புல் தலைகாண் பரிது. |
|
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும். |
17. | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி |
| தான்நல்கா தாகி விடின். |
|
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும். |
18. | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் |
| வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. |
|
வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது? |
19. | தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் |
| வானம் வழங்கா தெனின். |
|
இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும். |
20. | நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் |
| வானின் றமையா தொழுக்கு. |
|
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும். |