1186. | விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் |
| முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. |
|
விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது. |
1187. | புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் |
| அள்ளிக்கொள் வற்றே பசப்பு. |
|
தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவு தான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்! |
1188. | பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத் |
| துறந்தார் அவரென்பார் இல். |
|
இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துப் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே. |
1189. | பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் |
| நன்னிலையர் ஆவர் எனின். |
|
பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக! |
1190. | பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் |
| நல்காமை தூற்றார் எனின். |
|
என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்! |