120. தனிப்படர் மிகுதி |
1191. | தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே |
| காமத்துக் காழில் கனி. |
|
தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார். |
1192. | வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு |
| வீழ்வார் அளிக்கும் அளி. |
|
காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும். |
1193. | வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே |
| வாழுநம் என்னும் செருக்கு. |
|
காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும். |
1194. | வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் |
| வீழப் படாஅர் எனின். |
|
விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார். |
1195. | நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ |
| தாம்காதல் கொள்ளாக் கடை. |
|
நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது? |