1216. | நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற் |
| காதலர் நீங்கிலர் மன். |
|
நனவு மட்டும் திடீரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே. |
1217. | நனவினான் நல்காக் கொடியார் கனவினான் |
| என்னெம்மைப் பீழிப் பது. |
|
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்? |
1218. | துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் |
| நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. |
|
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார். |
1219. | நனவினான் நல்காரை நோவர் கனவினான் |
| காதலர்க் காணா தவர். |
|
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர். |
1220. | நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான் |
| காணார்கொல் இவ்வூ ரவர். |
|
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற நமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ? |