3. நீத்தார் பெருமை |
21. | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து |
| வேண்டும் பனுவல் துணிவு. |
|
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும். உயர்வாகவும் இடம் பெறும். |
22. | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து |
| இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. |
|
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது. |
23. | இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் |
| பெருமை பிறங்கிற் றுலகு. |
|
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக் குரியவர்களாவார்கள். |
24. | உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் |
| வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. |
|
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான். |
25. | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் |
| இந்திரனே சாலுங் கரி. |
|
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான். |