125. நெஞ்சொடுகிளத்தல் |
1241. | நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் |
| எவ்வநோய் தீர்க்கு மருந்து. |
|
எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா? |
1242. | காத லவரிலர் ஆகநீ நோவது |
| பேதமை வாழியென் நெஞ்சு. |
|
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க. |
1243. | இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் |
| பைதல்நோய் செய்தார்கண் இல். |
|
பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்? |
1244. | கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் |
| தின்னும் அவர்க்காணல் உற்று. |
|
நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும்போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்றுவிடுவது போல் இருக்கின்றன. |
1245. | செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம் |
| உற்றால் உறாஅ தவர். |
|
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கை விட்டு விட முடியுமா? |